கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வளாகத்தில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.