குமரி: வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் திருட்டு.

72பார்த்தது
குமரி: வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் திருட்டு.
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் பெல்கியாஸ்(39). இவர் சவுதி அரேபியாவில் மனைவி, குழந்தைகளுடன் வேலை பார்த்து வருகிறார். பெல்கியாஸின் வீட்டை அவரது தம்பி பராமரித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 33 பவுன் திருடுபோயிருந்தது. புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி