கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட திருக்கோவில்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.