கன்னியாகுமரி அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோ விடுவது தொடர்பாக இவருக்கும் ஆரோக்கிய சுமன் மற்றும் அருள்ராஜ் ஆகிய ஆட்டோ டிரைவர்களுக்கும் விரோதம் இருந்து வந்தது. கோவிந்தராஜன் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ விடும்போது அவரை ஆபாசமாக பேசி ஆரோக்கிய சுமன் மற்றும் அருள்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமரி போலீசார் 2 பேர் மீதும் நேற்று வழக்குப் பதிந்தனர்.