கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதலாம் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ. 60, 000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 40, 000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று(அக்.01) தெரிவித்தார்.