குமரி: 5 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கு: 2 பெண்கள் கைது

6741பார்த்தது
குமரி: 5 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கு: 2 பெண்கள் கைது
வடக்குச்சூரங்குடியில் பிச்சைகாலசாமி கோவில் அருகே மது குடித்தவர்களை கண்டித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (37), ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் (50), சிவ பெருமாள் (68), அச்சுதன் (20), அகிலன் (20) மற்றும் 14 வயது சிறுவன் உள்பட 5 பேரை தட்டான் விளையைச் சேர்ந்த சிவன் (27) உள்பட 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி, பயங்கர ஆயுதத்தால் தாக்கினர்..

இதில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் சிவன், வட்டவிளையைச் சேர்ந்த அஜெய் (19), இருளப்பபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (24) மற்றும் 2 பெண்கள் உள் பட 15 பேர் மீது வழக்கு செய் யப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க ராஜாக்கமங்கலம் இன்ஸ் பெக்டர்ராமர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்பு உடைய ரேனுகா, அவரது மகள் - பெனிற்றா ஆகியோரை - நேற்று (20.02.2024) போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி