குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவிய 25வது ஆண்டு வெள்ளி விழா வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இதை ஒட்டி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்போன்களில் செல்பி எடுத்தபடியும் படம் பிடித்த படியும் செல்கின்றனர்.