கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பேரூராட்சி பெருமாள்புரத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7 லட்சம் செலவில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் அதிமுக செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் இதற்கான பணி தொடங்கியது. பெருமாள்புரம் ருக்குமணி வீடு முதல் பாலகிருஷ்ணன் வீடு வரையிலும், பாலகிருஷ்ணன் வீடு முதல் தாமோதரன் வீடு மற்றும் மணிகண்டன் வீடு வரையிலும் அலங்கார தரைஓடு பதிக்கப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெருமாள்புரம் கிளை அதிமுக செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். ஊர்த்தலைவர் சி. சுடலைமணி, செயலாளர் சந்திரகுமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கமால், கொட்டாரம் பேரூராட்சி 15 ஆவது கவுன்சிலர் தங்ககுமார், கொட்டாரம் பேரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜேஷ், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என். சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், பெருமாள்புரம் சம்பூர்ண தேவராஜன், 13 வது வார்டு கிளை செயலாளர் ராமகிருஷ்ணன், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதா பாஸ்கர், செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.