கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ராகினி என்பவரது வீட்டுக் கழிவறைக்குள் நேற்று (ஜூலை 5) உடும்பு ஒன்று புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த குமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி, நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அந்த உடும்பை மீட்டனர். பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.