ஆரல்வாய்மொழியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

2950பார்த்தது
ஆரல்வாய்மொழியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மனிஷா(27). மணிஷாவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்று கணவன்-மனைவிக்கு இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனிஷா படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டன் கதவை தட்டியுள்ளார்.

ஆனால், கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மனிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று மனிஷாவை மீட்டு அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மனிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதைக்கேட்டு அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து சென்று மனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகு றித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி