கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் இந்த மழையானது நீடித்துள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத்தலமான காளிகேசத்தில் இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.