கன்னியாகுமரி சன் செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் நேற்று (ஜன.3) இந்த பகுதியில் உள்ள குப்பையில் திடீரென்று தீ பிடித்தது. அப்போது அங்கு காற்று பலமாக வீசியதால் தீ மெளமெளவென்று பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.