கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பஜார் பகுதி உள்ளது. இந்த பஜாரில் இரண்டு கடைகளில் இருந்து குப்பைகளை அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் , பேரூராட்சி நிர்வாகம் 2 கடைகளுக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்தது.