கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயத்தை சேர்ந்தவர் பீர் முகம்மது (வயது 59). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி பானு. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். பீர்முகம்மது கடந்த 23-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூருக்கு சென்றார்.
தனியார் பள்ளி அருகே சென்ற போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பீர்முகம்மது சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(செப்.27) இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.