ஈத்தாமொழி அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.

66பார்த்தது
ஈத்தாமொழி அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள ஈயன் விளையை சேர்ந்தவர் குமார் (வயது 48), டெம்போ டிரைவர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்
மனமுடைந்த குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி