தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரியில் அரசு விழாவில் பங்கேற்க உள்ளதால் பேருராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு வைக்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை இன்று (டிச. - 29) அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், பல கோடி ரூபாய் முதலீடு செய்து சீசன் கால கடைகளை அமைத்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக தேமுதிக நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.