ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இன்று வந்து குவிந்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ளது.