கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தோவாளை தாசில்தார் கோலப்பன் மற்றும் ஞாலம் கிராம நிர்வாக அலுவலர் சண்முக பிரியா ஆகியோரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தாழக்குடி பேரூராட்சி துணைத் தலைவர் எஸ். என். ராஜா தலைமை தாங்கினார். ஆதிதிராவிட ஒருங்கிணைப்பு குழுமாவட்ட செயலாளர் சவுத்திரி, அம்பேத்கர் பாசறை ஆசீர், கன்னியா குமரி சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் சிறுத்தை தாஸ், புரட்சி தமிழகம் பறையர் பேரவை மாவட்ட தலைவர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப் பாட்டத்தை நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் பகலவன் தொடங்கி வைத்தார். ஆர்ப் பாட்டத்தில் அம்பேத்கார் பாசறை சுகுமாரன், தமிழக முன்னேற்ற மாவட்ட செயலாளர் ராஜேஷ்வர பாண்டியர் மற்றும் ஞாலம் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேசினர். ஆர்ப் பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.