கன்னியாகுமரி பேரூராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் பெண் பணியாளர் ஒருவரை நேற்று மதியம் அஞ்சுகூட்டுவிளை பகுதியில் வைத்து பிரபல ரவுடி சுஜித் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். மேலும் பணம் கொடுக்க மறுத்த அந்த பெண் தூய்மை பணியாளரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். பின்னர் கன்னியாகுமரி போலீசார் தகவல் அறிந்து தூய்மை பணியாளரை மிரட்டிய சுஜித்தை கைது செய்தனர்.