கன்னியாகுமரி கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது கண்ணாடி நடைபாலத்தை அழகுபடுத்தும் விதமாக சிற்பங்கள் அமைக்கும் பணி, அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி, திருவள்ளுவர் சிலையை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்து விரைந்து முடித்திடும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்