ஆதிச்சன்புதூர் குளத்தில் மண் எடுக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு

60பார்த்தது
ஆதிச்சன்புதூர் குளத்தில் மண் எடுக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா செண்பகராமன்புதூர் பகுதியில் ஆதிச்சன்புதூர் குளம் உள்ளது. இந்த குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

விவசாய தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்கப்படுவதை நேற்று கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மண் உரிய அளவில் மட்டும் எடுத்து பயன்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி