முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று (டிச. 31) காலை குமரியில் திருவள்ளுவர் கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார். இதில், 1812 ம் ஆண்டு முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள், திருக்குறள் குறித்த ஓலைச்சுவடிகள், அரிய வகை நூல்கள், உலகில் இருக்கும் அனைத்து திருவள்ளுவர் சிலைகள் இருக்கும் இடங்கள் குறித்த தகவல்கள், திருவள்ளுவர் சார்ந்த புத்தகங்கள் என பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.