கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட வைகுண்டர் சாலையில் மழை நீர் தேங்குவதால் வடிகால் சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்து சாலையின் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதனை கோபாலன் மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோர் சேதப்படுத்தியதாக பேரூராட்சி செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், அஞ்சுகிராமம் போலீசார் நேற்று (ஜூன் 8) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.