நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), தொழிலாளி. இவருடைய மனைவி உதய ராணி. சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த
விஜய் (25) உள்பட 2 பேர் சேர்ந்து உதயராணியை கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந
்த விஜய் உள்பட 2 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.