அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சுசீந்திரம் கற்காடு சாலையில் இன்று (டிசம்பர் 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை கட்சி வழக்கறிஞர் ஜானி மற்றும் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீ வைத்த உருவ பொம்மையை அணைத்தனர்.