அஞ்சுகிராமம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை.

80பார்த்தது
அஞ்சுகிராமம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் ஆத்தியடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46), கொத்தனார். இவருக்குதிருமண மாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேகரின் மனைவி வள்ளியூரில் உள்ள தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை கவனிக்க அங்கு சென்று விட்டார். இதனால் சேகர் தனது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவரது தாயார் பக்கத்து வீட்டுக்கு சென்று படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்த போது சேகர் வீட்டில் உள்ள உத்தரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி