அழகியபாண்டியபுரம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை.

585பார்த்தது
அழகியபாண்டியபுரம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே கேசவன்புதூர் அன்னை தெரேசா நகர் பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 34). கொத்தனாரான இவர் தனது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.
மது பழக்கம் உடைய வினுவுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வினுவின் குடும்பத்தினர் புத்தாண்டு பிரார்த்தனைக்கு ஆலயத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய போது வினு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் விரைந்து வந்து வினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி