பூதப்பாண்டி: வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

52பார்த்தது
பூதப்பாண்டி: வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பு, கண்டளவு மேற்குதெருவை சேர்ந்தவர் கோபி, விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பாக்கியமணி (வயது 55). கோபி நேற்று முன்தினம் காலையில் தெரிசனங்கோப்பு பகுதியில் வயல் வேலைக்கு சென்றார். 

அதன் பின்பு மனைவி பாக்கியமணி வீட்டை பூட்டிவிட்டு பேச்சான்குளத்தில் வேலைக்கு சென்றார். வீட்டுக்கு பின்னர் பாக்கியமணி வேலை முடித்து மாலையில் வீட்டுக்கு வந்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 2 1/4 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலிகளை காணவில்லை. 

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். தொழிலாளி வீட்டில் 2 1/4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி