கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 2 மணிநேரம் தாமதம்.

78பார்த்தது
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் திடீரென கடலில் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதையடுத்து காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்பட வில்லை. பின்னர், 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, 2 மணிநேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அத னைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். தொடர்ந்து 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி