கன்னியாகுமரி கடலில் இன்று தாழ்வான நீர்மட்டம் காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த நினைவகத்தை பார்ப்பதற்காக வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
நீர்மட்டம் சீரடைந்த உடன் படகு போக்குவரத்து நடைபெறும் என பூம்புகார் அதிகாரிகள் தெரிவித்தனர்.