கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த தனலட்சுமி(41) தனியார் பள்ளி ஆசிரியர். இவர் பைக்கில் நாகேஸ்வரி என்பவர் வீட்டின் முன்பு நின்றபோது நாகேஸ்வரி, விஜயம்மாள் ஆகியோர் வாகனத்தை இங்கே நிறுத்தாதே என்று கூறியுள்ளனர்.
இதைப் பார்த்த கிருஷ்ணன் வண்டியை எடுக்க வேண்டியதுதானே என்று கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று (மார்ச்.12) வழக்குப் பதிந்துள்ளனர்.