கன்னியாகுமரியில் மேலும் ஒரு வீட்டில் திருட்டு

58பார்த்தது
கன்னியாகுமரியில் மேலும் ஒரு வீட்டில் திருட்டு
குமரி கிளாரட் நகரை சேர்ந்தவர் ராபின்சன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி ஹெப்சி புத்தாண்டு கொண்டாட இவர் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று (ஜனவரி 2) காலை வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 2 விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி