கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கொட்டாரம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கொட்டாரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தலைமையின் அறிவுறுத்தலின்படி கூட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை இணைத்துக் கொட்டாரத்தில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய துணைச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.