கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அழகம்மன் கோவில் பகுதியில் தினசரி இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு நடந்து வந்த நிலையில் இன்று அதிகாலை சண்முக சங்கர் என்பவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில் உரிமையாளர் தனது வாகனத்தை எடுத்த போது தீ பற்றி முழுவதும் எரிந்துள்ளது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.