அஞ்சுகிராமம் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு.

70பார்த்தது
அஞ்சுகிராமம் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த மயிலாடி புதூரைச் சேர்ந்தவர் சந்திர சேகர் (வயது 64). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 2 முறை மாரடைப்பு நோய் வந்து சிகிச்சை பெற்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர் மயிலாடி புதூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி