ஆசாரிபள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீ

552பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் நேற்று (08.06.2024) ஒரு மருந்துக்கடை முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தீ பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றியும், மணலை அள்ளிபோட்டும் அணைத்தனர். பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டதால், அந்த பகுதியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்தி