கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைகுளம் தாமரைசக்தி மஹாலில் லயன் ஜிம் சார்பாக 16-வது ஆணழகன் போட்டி நேற்று (டிசம்பர் 22) நடந்தது. இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா. பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தாமரைப்பிரதாப், வக்கீல் ஆல்பர்ட் பண்ணையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.