கன்னியாகுமரியில் 8 கிலோ உணவு பொருட்கள் அழிப்பு

58பார்த்தது
கன்னியாகுமரியில் 8 கிலோ உணவு பொருட்கள் அழிப்பு
கன்னியாகுமரியில் மெயின்ரோடு பகுதியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் நேற்று (டிசம்பர் 21) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, முந்தைய நாள் சமைக்கப்பட்ட அரிசி சாதம் மற்றும் நூடுல்ஸ் உள்பட சுமார் 15 கிலோ உணவு பொருட்கள், பாலித்தீன் பைகள், சாப்பாடு தட்டுகள் 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சுமார் 1 கிலோ எடையுள்ள சிக்கன் உள்பட 8 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 உணவகங்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி