கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழா இன்று (டிச. 30) கொண்டாடப்பட்டது. ஆஞ்சநேயருக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.