கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறை
முகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கன்னியாகுமரி போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு புதருக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சின்ன
முட்டத்தைச் சேர்ந்த சதீஷ், ஆன்றணி மற்றும் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.