கொத்தனாரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது.

74பார்த்தது
கொத்தனாரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது.
ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 32), கொத்தனார். புதூரை அடுத்த பொழிக்கரையை சேர்ந்தவர் சகாய போர்ஜியோ (36). இவரது மனைவி எஸ்தர் (34). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுபாஷ், எஸ்தர் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு மாதம் ரூ. 2, 500 வீதம் மாதத்தவணையாக கட்டி வந்துள்ளார். இதனிடையே கடந்த மார்ச் மாத தவணையை சுபாஷ் கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிதி நிறுவனம் பலமுறை அவரிடம் தவணையை செலுத்த சொல்லியும் பணம் கட்டவில்லை என தெரிகிறது. இச்சம்பவம் பற்றி எஸ்தர் தனது கணவர் சகாய போர்ஜி யோவிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று புதூர் சந்திப்பில் சுபாஷ் இந்தநிலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சகாய போர்ஜியோ மற்றும் அவரது நண்பர்கள் வண்ணான் விளையை சேர்ந்த சதீஷ் (34), மேலச்சூரங்குடியை சேர்ந்த பிரவீன் (36) ஆகிய 3 பேரும் சேர்ந்து சுபாஷிடம் பணம் கேட்டு தகராறு செய்து, பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் ஈத்தா மொழியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய போர் ஜியோ உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி