கன்னியாகுமரி புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1521 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து, மாவட்டம் முழுவதும் 63 சோதனைச்சாவடிகள் அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணிக்க உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.