கன்னியாகுமரி மாவட்டத்தில் துணைத் தாசில்தார்கள் நிலையில் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதித்துறை பயிற்சி நிறைவு பெற்ற 8 துணை தாசில்தார்களான மீனாகுமாரி, துர்கா ரவீந்திரன், பாஞ்சாலி ஆறுமுகம், மகேஷ் மாரியப்பன் உட்பட 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று பிறப்பித்தார்.