கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் 61 வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (மே 31) பெய்த மழையில் மாவட்டத்தில் மேலும் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது மழையினால் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 69 ஆகியுள்ளது.