உத்திரமேரூர் புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்

82பார்த்தது
உத்திரமேரூர் புறவழிச்சாலை பணி மீண்டும் துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, செங்கல்பட்டு சாலை, எண்டத்தூர் சாலை, வந்தவாசி சாலை வழியே, தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் காலை, மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வெளியூர் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உத்திரமேரூருக்கு வெளியே, புறவழிச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்படி, மாநில நெடுஞ்சாலை துறை, 2022 -- - 23 நிதி ஆண்டில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37. 08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

தொடர்ந்து, பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால், சாலை அமைக்கும் இடத்தில் மழை வெள்ளநீர் சூழ்ந்து இருந்தது. இதனால் பணி தடைப்பட்டு வந்தது. தற்போது, மழை வெள்ளநீர் வடிந்ததால், வேடபாளையம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் துவக்கி, மும்முரமாக செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி