செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே மழுவங்கரணை ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இதை, அப்பகுதி வாசிகள் பயன்படுத்தி வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் 1. 41 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், குழாய்கள் உடைந்து சுகாதார வளாகம் சேதமடைந்ததால், சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.