பிரதமரின் வளர்ச்சி திட்ட பேரணி வாகனத்திற்கு வரவேற்பு.

59பார்த்தது
பிரதமரின் வளர்ச்சி திட்ட பேரணி வாகனத்திற்கு வரவேற்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிபூர் ஊராட்சியில் பாஜக சார்பில் பாரத பிரதமரின் தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் டாடா மேஜிக் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி திரை கொண்ட பாரதப் பிரதமரின் திட்டங்கள் குறித்த பிரச்சார வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழரசன் ஏற்பாட்டில் பொதுச் செயலாளர்கள் வாசன் ருத்தரகுமார் ஆகியோர் வரவேற்பில் குஜராத் மாநில துணைத்தலைவரும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் காந்திநகர் எம் பி ரமீளா பெண் பாரா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாரத பிரதமரின் தமிழ்நாட்டின் திட்டங்கள் பிரதமரின் முத்ரா திட்டம் , பூத்தொழில் இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், மக்கள் மருந்தகங்கள், நான்கு புதிய வந்தய பாரத் ரயில், பிரதமர் விபத்து காப்பீடு திட்டம், பிரதமர் சாலையோர வியாபாரிகள் நிதி உதவி திட்டம், உஜ்வாலா திட்டம் , அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் இடையே பேசினார்.

தொடர்புடைய செய்தி