கல்பாக்கத்தில் திமுக எம்பி க்கு உற்சாக வரவேற்பு

51பார்த்தது
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் செல்வம் 3 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாவதாக வெற்றி பெற்றார் அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர் அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு வேட்பாளர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அருகே உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு மாவட்ட மீனவரணி தலைவர் கயல் மாரிமுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்கீர் முகமது உள்ளிட்டோருடன் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கூட்டணி கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.