உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றி பார்த்த வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது 3. 5 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தோம்.
அதிமுகவாக இருக்கட்டும், திமுக வாக இருக்கட்டும் அவர்களோடு இணையும் போதெல்லாம் ஏதோ பாரதிய ஜனதா கட்சியை தூக்கி சுமப்பது போலவும், பாரதிய ஜனதா கட்சி அந்திப் பிழைக்கின்ற கட்சி என்பது போலவும், சொந்தக் காலில் நிற்க முடியாத கட்சி போலவும் விமர்சனங்களை செய்து வந்தனர்.
இந்த விமர்சனங்களை தூள் தூளாக்க வேண்டுமென்றால் சுயமாக, தர்மத்தின் அடிப்படையில், சித்தாந்தத்தின் அடிப்படையில், இந்துத்துவா என்கின்ற இந்த பாரதத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கத்திலே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அமைக்கப்பட்டது.
அந்த வகையில் எங்கள் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 17. 5%, பாரதிய ஜனதா கட்சி மாத்திரம் 11. 5% பெற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு விட மூன்று மடங்கு நாங்கள் வாக்கு சதவீதத்தில் அதிகரித்திருக்கிறோம்.
எனவே வருகின்ற 2026 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் ஆன ஆட்சி தமிழகத்தில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.