கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு.
மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கருப்பு தினமாக அனுசரித்து சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி கடலில் பால் வார்த்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி எனும் ஆழி பேரலையால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான மீனவர்கள் கடல் அலையால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் சுனாமி தினமான இந்நாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதில், திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர் பகுதி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மீனவர் பகுதிகளில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை மீனவர்கள் அனுசரித்தனர். சுனாமியில் உயிரிழிந்த உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியதுடன் சுனாமியில் உயிரிழந்த உறவினர்களுக்கு கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீனவ பஞ்சாயத்தினர் சுனாமி நினைவு தினத்தை அரசு விடுமுறையாக அறிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.